தமிழகத்தில் தனியாரை விட குறைந்த விலையில் பால் விற்பனையை ஆவின் நிறுவனம் செய்து வருகிறது.
தமிழக அரசின் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் பெரும்பாலும் பொதுமக்கள் இடையே சிறந்த வரவேற்பு உள்ளது. இதன் மீதான பல்வேறு குளறுபடிகள் நீக்கப்பட்டு படிப்படியாக பால் விற்பனை சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீர்திருத்த நடவடிக்கைகளின் பின் பால் விற்பனை ஏழு சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை தவிர சென்னை மாவட்டத்தில் விற்பனை அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 15 லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகின்றன. பிற மாவட்டங்களில் இதுவரை 15 லட்சம் லிட்டர் ஆக இருந்தது. தற்போது 16 லட்சம் லிட்டராக மாறியுள்ளது. பாலின் விற்பனை அதிகரித்துள்ள நிலையம் கொள்முதல் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் பால் கொள்முதல் திட்ட முடிவுகளை வகுத்து பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் கொள்முதலை அதிகரிக்கும் போது ஆவின் நிறுவனமும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பால் விநியோக சங்கத் தலைவர் தெளிவுத்துள்ளார்.