தமிழகத்தில் பண்டிகை தினங்களை முன்னிட்டு ஆவின் நிறுவன தயாரிப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் 10000 இடங்களில் விற்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விற்பனை செய்து வருகிறது. இவை தவிர தயிர், பால்கோவா, நெய் உட்பட்ட 225 வகையான பொருட்களை தமிழகம் முழுவதும் ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் வரும் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை சிறப்பு பண்டிகைகளை முன்னிட்டு 10000 இடங்களில் விற்பனை செய்ய உள்ளது. கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் இதன் மூலம் 116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இதனால் விற்பனை விதம் 40 சதவீதம் அதிகரித்தது. அதே போன்று இந்த ஆண்டு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.