தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பலகாரங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டும், ஆவின் நிறுவனம் இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனையில் ஈடுபட்டது. ஆவின் பால் பொருட்கள் மூலம் இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்யப்பட்டன.. தீபாவளி பண்டிகை நிறைவடைந்துள்ள சமயத்தில், ஆவின் நிறுவனம் தனது பண்டிகை கால விற்பனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆவின் நிறுவனத்தின் தீபாவளி பண்டிகை விற்பனை 130 கோடி ரூபாய் அளவில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 10% உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.