ஆவின்: தீபாவளி விற்பனையில் புதிய சாதனை

October 30, 2024

தீபாவளி பண்டிகைக்கு ஆவின் நிறுவனம் ரூ.115 கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ.115 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் மற்றும் […]

தீபாவளி பண்டிகைக்கு ஆவின் நிறுவனம் ரூ.115 கோடி மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ.115 கோடி மதிப்பிலான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள், சுமார் 4.5 லட்சம் கிராமப்புற உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை இணையம் மூலமாக சுகாதாரமான முறையில், தரம் ஒன்றை குறிக்கோளாகக் கொண்டு, பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களை தயாரிக்கப்பட்டு நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாகும்."இதில் தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேவையான இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu