ஆந்திர மாநில ஆளுநராக பதவியேற்றார் அப்துல் நசீர்

February 24, 2023

ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர் பதவியேற்றார். முன்னாள் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான அப்துல் நசீர் 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 2017 பிப்ரவரி 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரை பணியாற்றினார். இந்நிலையில் தற்போது விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் ஆந்திர மாநில புதிய ஆளுநராக நீதிபதி […]

ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர் பதவியேற்றார்.

முன்னாள் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான அப்துல் நசீர் 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி வழக்கறிஞராகப் பதிவு செய்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 2017 பிப்ரவரி 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி வரை பணியாற்றினார்.

இந்நிலையில் தற்போது விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் ஆந்திர மாநில புதிய ஆளுநராக நீதிபதி எஸ்.அப்துல் நசீர் பதவி ஏற்றார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu