அபுதாபியைச் சேர்ந்த ஐ எச் சி நிறுவனம், அதானி குழும முதலீடுகளை விற்க திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த முதலீடுகளை சமநிலை செய்யும் நடவடிக்கையாக, அதானி குழும முதலீடுகள் விற்கப்பட உள்ளதாக ஐ எச் சி தெரிவித்துள்ளது.அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் மற்றும் அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களில் செய்திருந்த முதலீடுகளை ஐ எச் சி நிறுவனம் விற்கவுள்ளது. ஐ ஹெச் சி விற்கும் அதானி பங்குகளை வேறு எந்த நிறுவனம் வாங்க உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், பங்குகளை விற்பதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி உள்ளதாக ஐ எச் சி தெரிவித்துள்ளது.