ரயில்களில் ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு மீண்டும் அமல்

March 23, 2023

ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கட்டணத்தை மீண்டும் கொண்டு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் குறைவான கட்டணத்தில் குளிர்சாதன வகுப்பில் பயணிகள் பயணிக்க வசதியாக ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘3இ’ என குறிப்பிடப்பட்ட இந்த எகானமி வகுப்பில் ஏசி 3 அடுக்கு கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாக இருக்கும். இந்த எகானமி வகுப்பு கட்டணம் கடந்த ஆண்டு நவம்பரில் ரத்து […]

ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கட்டணத்தை மீண்டும் கொண்டு வருவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களில் குறைவான கட்டணத்தில் குளிர்சாதன வகுப்பில் பயணிகள் பயணிக்க வசதியாக ஏசி 3 அடுக்கு எகானமி வகுப்பு கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘3இ’ என குறிப்பிடப்பட்ட இந்த எகானமி வகுப்பில் ஏசி 3 அடுக்கு கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம் வரை குறைவாக இருக்கும். இந்த எகானமி வகுப்பு கட்டணம் கடந்த ஆண்டு நவம்பரில் ரத்து செய்யப்பட்டது. ஏசி 3 அடுக்கில் வழங்கப்படும் படுக்கை விரிப்புகள் எகானமி வகுப்பிற்கு ஆரம்பத்தில் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த எகானமி கட்டண முறை மீண்டும் கொண்டு வரப்படுவதாக தற்போது ரயில்வே அறிவித்துள்ளது. அதே சமயம், படுக்கை விரிப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu