வருகிற 2025ம் ஆண்டு முதல் லாரி ஓட்டுனர்களுக்கு ஏசி வசதி செய்து கொடுப்பதை கட்டாயமாக்க ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
வருகிற 2025ம் ஆண்டு அனைத்து லாரிகளிலும் கேபின்களில் ஏசி வசதி இருப்பதைக் கட்டாயமாக்க ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஏனெனில், இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. கேபின்களில் ஏசி அமைக்க அதிகம் செலவாகும். இதனால் லாரிகளின் விலையும் 50,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஓடிக் கொண்டிருக்கும் லாரிகள் பெரும்பாலும் பழைய மாடல் என்ஜின் கொண்டவை. இதில் ஏசி பொருத்துவது சிரமமாக இருக்கும். ஏசி போட்டு வண்டி ஓட்டினால் டீசல் பயன்பாடு அதிகமாகும் என்றும் கூறப்படுகிறது.














