பொதுமக்களின் வசதிக்காக ஏ.சி. மின்சார ரெயில் சேவையை விரிவுபடுத்த ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் தற்போது ஒருவழித் தடத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மற்ற வழித்தடங்களிலும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் 10 பெட்டிகளுடன் புதிய ஏ.சி. ரெயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த ரெயில், இன்னும் 2 மாதங்களில் சென்னை கோட்டத்திற்கு ஒப்படைக்கப்படும். அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது பின்னர் தீர்மானிக்கப்படும். இதற்கிடையில், பெரம்பூரில் இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் ரெயிலும் தயாராகி, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.














