பிரபல தனியார் பங்கு நிறுவனங்களான அக்சல் மற்றும் டைகர் குளோபல் ஆகிய நிறுவனங்கள், பிளிப்கார்ட் இணைய வர்த்தக நிறுவனத்தில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வால்மார்ட்டில், இந்த இரு பங்கு நிறுவனங்களுக்கும் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகள் உள்ளன. இவற்றை விற்பதன் மூலம் இந்த நிறுவனங்கள் பிளிப்கார்ட்டில் இருந்து வெளியேறுவதாக கூறப்படுகிறது. இது பிளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பில் 5% ஆகும். இரு பங்கு நிறுவனங்களும் வெளியேறிய பின்னர், பிளிப்கார்ட்-ல் வால்மார்ட்டின் பங்கு 72% ஆக உயரும் என்று கருதப்படுகிறது. அக்சல் நிறுவனத்திடம் 1% பிளிப்கார்ட் பங்குகளும், டைகர் குளோபல் வசம் 4% பிளிப்கார்ட் பங்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.