பெங்களூருவை சேர்ந்த சிலிக்கான் சிப் வடிவமைப்பு நிறுவனம் எக்ஸெல் மேக்ஸ் டெக்னாலஜிஸ் ஆகும். இந்த நிறுவனத்தை அசெஞ்சர் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
அசெஞ்சர் நிறுவனம் எக்ஸெல் மேக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளதால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 450 பொறியியலாளர்கள் அசெஞ்சர் நிறுவனத்தின் குழுவில் இணைகின்றனர். முன்னதாக, கடந்த 2022 ல் எக்ஸ்ட்ரீம் இ டி ஏ என்ற செமி கண்டக்டர் வடிவமைப்பு நிறுவனத்தை அசெஞ்சர் கையகப்படுத்தியது. அதற்குப் பிறகு தற்போது எக்ஸெல் மேக்ஸ் சிப் டிசைன் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. அத்துடன், முதல் முறையாக இந்திய நிறுவனம் ஒன்றை அசெஞ்சர் கையகப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவு மற்றும் செமி கண்டக்டர் துறையில் அசுர வளர்ச்சி ஏற்பட்டு வரும் சூழலில், அசெஞ்சர் நிறுவனத்தின் இந்த கையகப்படுத்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.