தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமாக உள்ள அக்சன்சர் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு வருவாய் 9.9% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்சன்சர் நிறுவனம், செப்டம்பர் முதல் ஆகஸ்ட் வரையிலான நிதியாண்டு முறையை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
முதலாம் காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. மேலும், நவம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 5% உயர்ந்து, 15.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது நிறுவனத்தின் கணிக்கப்பட்ட வருவாயை விட 1 பில்லியன் டாலர்கள் கூடுதலாகும்.
சுகாதாரம், பொது நலன் மற்றும் மனித வள மேம்பாட்டு துறையில் இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 20 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், வருடாந்திர அடிப்படையில், நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 16000 ஆக உள்ளது.