விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஜூலை 10 தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, […]

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஜூலை 10 தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனு மீதான பரிசீலனையை தொடர்ந்து 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மனுக்களை யாரும் வாபஸ் பெறாத நிலையில் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதன் வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu