இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஏசர் மற்றும் அசுஸ் நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தை இரு மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமாக ஏசர் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் உள்நாட்டு தொழிலாளர்களை ஆதரிக்கும் முயற்சியில் இறக்குமதிக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை தொடங்க ஏசர் மற்றும் அசுஸ் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. மேலும் இது குறித்து இந்தியாவில் இந்த ஆண்டு கம்ப்யூட்டர் லேப்டாப் விற்பனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஏசர் நிறுவன தலைவர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது. அதன்படி இந்தியாவிற்கு அதிகப்படியான கம்ப்யூட்டர் லேப்டாப்புகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய சந்தை மிக விரைவாக விரிவடைந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியா கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. எனவே இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் புதிய உற்பத்தியாலை விரைவில் தொடங்கப்பட்டு அதன் மூலம் ஏசர் மற்றும் அசுஸ் மேக் இன் இந்தியா திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














