இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் - IRDAI, அக்கோ காப்பீட்டு நிறுவனத்திற்கு ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிறுவனம் தவிர, கிரெடிட் ஆக்சஸ் நிறுவனத்திற்கும் ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023 ஆம் நிதியாண்டில், கூடுதலாக 3 காப்பீட்டு நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவின் காப்பீட்டு துறையில் தற்போது மொத்தம் 25 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இயங்கும் என சொல்லப்பட்டுள்ளது.
அக்கோ நிறுவனம் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் யூனிகார்ன் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிறுவனம், மோட்டார் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல காப்பீடுகளை வழங்கி வந்த நிலையில், ஆயுள் காப்பீடு இணைக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் துணையாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.














