மோசமான நிலையில் உள்ள 25 பொறியியல் கல்லூரிகளை மூட நடவடிக்கை

February 6, 2024

மோசமான நிலையில் உள்ள 25 பொறியியல் கல்லூரிகள் விரைவில் மூடப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நிதி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சிலவற்றில் பற்றாக்குறை உள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இவை விரைவில் முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேராசிரியர்கள் நியமனத்தை பொருத்தவரை நிதி இருப்பை பொறுத்து பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் […]

மோசமான நிலையில் உள்ள 25 பொறியியல் கல்லூரிகள் விரைவில் மூடப்படும் என அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நிதி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சிலவற்றில் பற்றாக்குறை உள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. இவை விரைவில் முதல்வருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேராசிரியர்கள் நியமனத்தை பொருத்தவரை நிதி இருப்பை பொறுத்து பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் எந்த ஒரு மோசமான சூழலும் இல்லை. சில கல்லூரிகள் நடத்த முடியாமல் உள்ளன. அது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் விசாரணையில் மோசமான கல்லூரிகளாக 25 கல்லூரிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிண்டிகேட் ஒப்புதல் பெற்று அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu