சொத்து வரி கட்டாத வணிக கட்டிடங்களை ஜப்தி செய்ய நடவடிக்கை

February 20, 2024

நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ள வணிக நிறுவன கட்டிடங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி தீவிரமாக சொத்து வரியை வசூலித்து வருகிறது. அதன்படி 15 மண்டலங்களிலும் சென்னை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் ஊழியர்கள் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். அத்துடன் இந்த நிதி ஆண்டில் ரூபாய் 1600 கோடி சொத்துவரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 1296 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை […]

நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ள வணிக நிறுவன கட்டிடங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி தீவிரமாக சொத்து வரியை வசூலித்து வருகிறது. அதன்படி 15 மண்டலங்களிலும் சென்னை மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் ஊழியர்கள் வரி வசூலை தீவிரப்படுத்தி வருகின்றனர். அத்துடன் இந்த நிதி ஆண்டில் ரூபாய் 1600 கோடி சொத்துவரி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 1296 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு கோடி கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை 40 நாட்களுக்குள் வசூலிக்கப்பட வேண்டும். இதற்காக சென்னை மாநகராட்சி செல்போன் வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. மேலும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாமல் பல லட்சங்களை நிலுவையில் வைத்துள்ள வணிக நிறுவனங்களை ஜப்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்க சட்டம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் செலுத்த வேண்டிய வரிகளை மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னரே செலுத்தி சென்னை மாநகராட்சி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu