ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை - மத்திய அரசு 

January 20, 2023

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதம் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் ராமர் பாலம் தமிழகத்தின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே கடலுக்குள் 50 கி.மீ. நீளத்துக்கு அமைந்துள்ளது. இந்தப் பாலம் சீதையை மீட்க ராமர் கட்டிய பாலம் என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2005-ம் ஆண்டில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்பிரமணியன் […]

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதம் பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் ராமர் பாலம் தமிழகத்தின் பாம்பனுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே கடலுக்குள் 50 கி.மீ. நீளத்துக்கு அமைந்துள்ளது. இந்தப் பாலம் சீதையை மீட்க ராமர் கட்டிய பாலம் என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2005-ம் ஆண்டில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பர்திவாலா அமர்வு முன் நேற்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில் ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகவும் கவனமாகப் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu