மிச்சாங் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களில் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 650 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நான்கு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருந்தன. மேலும் 40 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ரூபாய் 35 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற பயணிகள் வசதிக்காக ரயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகள் தங்கள் டிக்கெட் மூலம் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.