கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக நடிகன் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் தேவன் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர். இவர் ஏராளமான தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் 2004 ஆம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார். இந்த நிலையில் கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மாநில தலைவர் சுரேந்திரன் அறிவித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.