நடிகர் ஸ்ரீகாந்துக்கு பிறகு, கழுகு பட நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணாவுக்கு, நுங்கம்பாக்கம் போலீசில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் செல்போனை முடைத்து தலைமறைவாகி, கேரளாவுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார் சம்மன் வழங்க சென்றபோது அவர் இல்லாததால், வீட்டில் இருந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அவரை தேட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.