எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தை வாங்குவதில் அதானி, அம்பானி இடையே கடும் போட்டி

January 5, 2023

சட்டீஸ்கரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தை கையகப்படுத்த அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை கடும் போட்டியில் இறங்கி உள்ளன. எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தை வாங்க, இந்த இரு நிறுவனங்கள் தவிர, என்டிபிசி, டோரண்ட் பவர், சர்தா எனர்ஜி அண்ட் மினரல்ஸ், ஜிந்தால் பவர் உள்ளிட்ட நிறுவனங்களும் முயற்சித்து வருகின்றன. அதானி குழுமத்தின் எரிசக்தி பிரிவாக அதானி பவர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி துறையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் […]

சட்டீஸ்கரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தை கையகப்படுத்த அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமம் ஆகியவை கடும் போட்டியில் இறங்கி உள்ளன. எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தை வாங்க, இந்த இரு நிறுவனங்கள் தவிர, என்டிபிசி, டோரண்ட் பவர், சர்தா எனர்ஜி அண்ட் மினரல்ஸ், ஜிந்தால் பவர் உள்ளிட்ட நிறுவனங்களும் முயற்சித்து வருகின்றன.

அதானி குழுமத்தின் எரிசக்தி பிரிவாக அதானி பவர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் எரிசக்தி துறையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வளர்ச்சி அடைய வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளது. எனவே, எஸ்கேஎஸ் பவர் நிறுவனத்தின் கையகப்படுத்துதல் மிக முக்கியமாக கருதப்படுகிறது. நிலக்கரி தொடர்பான எரிசக்தி நிறுவனமான எஸ்கேஎஸ் பவர், பேங்க் ஆப் பரோடா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றில் சுமார் 1900 கோடி ரூபாய் கடன் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu