லாபத்தில் 50% வீழ்ச்சி - அதானி எண்டர்பிரைசஸ் அறிவிப்பு

November 3, 2023

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய வர்த்தகமான சுரங்க தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபத்தில் 50% சரிவு காணப்பட்டுள்ளது. கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 222.82 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50.5% வீழ்ச்சி ஆகும். மேலும், நிறுவனத்தின் செலவினங்கள் 8% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தின் முக்கிய வர்த்தகமான சுரங்க தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபத்தில் 50% சரிவு காணப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 222.82 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50.5% வீழ்ச்சி ஆகும். மேலும், நிறுவனத்தின் செலவினங்கள் 8% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுரங்க தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் 340 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், அதானி குழுமத்தின் விமான நிலைய வர்த்தகம் 49% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu