கிட்டத்தட்ட 16600 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த முறை, சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் நிதி திரட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான கால வரையறை இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் பங்கேற்கும் வருடாந்திர பொது சந்திப்பின்போது நிதி திரட்டல் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சந்திப்பு வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் 12500 கோடி ரூபாய் நிதி திரட்ட ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.














