அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் துபாய் கிளை Ospree International FZCO ஆகும். இந்த நிறுவனம், பிரான்சை சேர்ந்த Le Marche Duty Free SAS (LMDF) இன் 100% பங்குகளை கையகப்படுத்தி உள்ளது. இதன் மொத்த மதிப்பு 5000 யூரோக்கள் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம், டியூட்டி ஃப்ரீ தொழில்துறையில் அதானி குழுமத்தின் இருப்பு மற்றும் வளர்ச்சி அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது.
பிளமிங்கோ குழுமத்தை சேர்ந்த அதுல் அகுஜா, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி LMDF ஐ தொடக்கினார். இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு ஒரு யூரோ மதிப்பு உள்ளது. அதன்படி, 5000 பங்குகளை வாங்கி அதானி எண்டர்பிரைசஸ் இதனை முழுமையாக கையகப்படுத்தி உள்ளதாக பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில், டியூட்டி ஃப்ரீ சந்தையில் அதானி குழுமம் களமிறங்கியது. ஏற்கனவே, இந்தியாவில் விமான நிலைய கட்டமைப்புகளை விரிவாக்கி வரும் அதானி குழுமம், டியூட்டி ஃப்ரீ சந்தையில் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.