கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை அதானி குழுமத்தின் பிளாக்சிப் நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 38% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டில் 723 கோடியாக பதிவானது. இதுவே, நடப்பாண்டில் 451 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் வருடாந்திர அடிப்படையில் வெறும் 0.8% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 29180 கோடி ஆகும். அத்துடன், நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 11% சரிவடைந்து 3195 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எபிட்டா மார்ஜின் 12.5% ல் இருந்து 10.9% ஆக சரிந்துள்ளது. எனவே, 2024 ஆம் நிதி ஆண்டுக்கான டிவிடெண்ட் ஒரு பொது பங்குக்கு 1.3 ரூபாய் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.