அதானி குழுமம் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் கூடுதல் நிதியை முதலீடு செய்துள்ளது.
கிட்டத்தட்ட 8339 கோடிரூபாயை அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் அதானி குழுமத்தின் மொத்த முதலீடு 20,000 கோடியாக உயர்ந்துள்ளது. அத்துடன், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 70.3% பங்குகள் அதானி குழுமத்தின் வசம் சென்றுள்ளன. இந்திய அளவில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள சிமெண்ட் ஆலையை அம்புஜா சிமெண்ட்ஸ் கையகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.