பெண் விவசாயிகளுக்காக அதானி பவுண்டேஷன் புதிய திட்டம் அறிமுகம்பெண் விவசாயிகளுக்காக அதானி பவுண்டேஷன் புதிய திட்டம் அறிமுகம்

October 18, 2022

பெண் விவசாயிகளுக்காக அதானி பவுண்டேஷன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக உணவு தினத்தையொட்டி பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் சொடக்ஸோ இந்தியா மற்றும் அதானி பவுண்டேஷன் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து சொடக்ஸோ இந்தியாவின் சமூக பொறுப்புணர்வு திட்ட இயக்குநர் அஷ்வின் போஷ்லே கூறுகையில், பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொருளாதார ரீதியில் தற்சார்பு உடையவர்களாக ஊக்குவிக்கவும் அதானி பவுண்டேஷனுடன் இணைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் கட்டமாக 600 பெண் விவசாயிகளுக்கு நிலையான […]

பெண் விவசாயிகளுக்காக அதானி பவுண்டேஷன் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக உணவு தினத்தையொட்டி பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் சொடக்ஸோ இந்தியா மற்றும் அதானி பவுண்டேஷன் இணைந்து புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து சொடக்ஸோ இந்தியாவின் சமூக பொறுப்புணர்வு திட்ட இயக்குநர் அஷ்வின் போஷ்லே கூறுகையில், பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், பொருளாதார ரீதியில் தற்சார்பு உடையவர்களாக ஊக்குவிக்கவும் அதானி பவுண்டேஷனுடன் இணைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் முதல் கட்டமாக 600 பெண் விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் மாதத்துக்கு 500 கிலோ பச்சைப் பயறு அவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது. இது, வாடிக்கையாளர் தளங்களில் ஆரோக்கியமான உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளப்படும்.

சென்னையில் அதானி பவுண்டேஷனுடன் இணைந்து இந்த முன்னோடி திட்டத்தை சொடக்ஸோ முதன் முறையாக தொடங்கியுள்ளது. இதில் கிடைக்கும் வெற்றியினை அடுத்து நாட்டின் பிற நகரங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். பெண் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலம் அவர்களின் வணிகத்தை ஒவ்வொரு ஆண்டும் 20% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu