அதானி கிரீன் எனர்ஜி மற்றும் டோட்டல் எனர்ஜி நிறுவனங்கள் 50 : 50 கூட்டணியில் இணைந்துள்ளன. இதற்காக, பிரான்சைச் சேர்ந்த டோட்டல் எனர்ஜி நிறுவனம் 300 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளது. இந்த திட்டத்திற்கான ஒப்புதலை அதானி கிரீன் எனர்ஜி நிர்வாகக் குழு வழங்கியுள்ளது. இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில், சூரிய எரிசக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளன. வாடிக்கையாளர் ஒப்புதலுக்காக தற்போது இரு நிறுவனங்களும் காத்திருப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 19.75% பங்குகளை டோட்டல் எனர்ஜி கொண்டுள்ளது. அதன்படி, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் 2வது பெரிய பங்குதாரராக உள்ளது. இந்த இரு நிறுவனங்களும் அதானி டோட்டல் கேஸ் என்ற பெயரில் மற்றொரு கூட்டணியில் ஏற்கனவே இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கூட்டணி புத்தாக்க எரிசக்தி தொடர்பாக சொல்லப்பட்டுள்ளது.














