அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் குஜராத்தில் உள்ள சூரிய மின் நிலைய செயல்பாடுகளை தொடங்கியுள்ளது. அதன்படி, 2000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 10000 மெகாவாட்டை தாண்டி உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த இலக்கை எட்டும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை அதானி கிரீன் எனர்ஜி பெற்றுள்ளது. தற்போதைய நிலையில், அதானி கிரீன் எனர்ஜியின் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 10934 மெகாவாட் ஆகும்.
அதானி கிரீன் எனர்ஜி சார்பில், 7393 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி, 1401 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் 2140 மெகாவாட் காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தியின் கூட்டு மின் உற்பத்தி செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2030 ஆம் ஆண்டு வாக்கில், 45 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை எட்டும் நோக்கில் நிறுவனம் பணியாற்றி வருகிறது.