அதானி குழுமத்தை சேர்ந்த அதானி பசுமை எரிசக்தி நிறுவனம், சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சூரிய மின் உற்பத்தி விற்பனையில் 9% மற்றும் காற்றாலை மின் உற்பத்தி விற்பனையில் 47% உயர்வு பதிவாகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் சூரிய ஆற்றல் மின்சார விற்பனை 2507 மில்லியன் யூனிட்டுக்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்திற்கு சொந்தமான சூரிய மின் நிலையங்கள் 99.8% செயல்பாட்டில் உள்ளதாகவும், கிரிட்டுகள் 99.6% செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலைகளை பொறுத்தவரை, 300 மில்லியன் யூனிட்டுகள் மின் விற்பனை பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் 92.7% காற்றாலை மின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், 88.2% கிரிட்டுகள் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான சரிவை பதிவு செய்துள்ளது. மின் இணைப்புகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.