குஜராத்தில் சூரிய மின் உற்பத்தி தொடக்கம் - அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் உயர்வு

February 14, 2024

உலகின் மிகப்பெரிய புத்தாக்க எரிசக்தி மையம் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, அதானி குழுமத்தை சேர்ந்த அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், சூரிய மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தக நாளில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் கிட்டத்தட்ட 4% அளவுக்கு உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் போது, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1882 ரூபாயாக இருந்தது. குஜராத்தில் உள்ள காவ்தா சூரிய மின் உற்பத்தி மையத்தில், […]

உலகின் மிகப்பெரிய புத்தாக்க எரிசக்தி மையம் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, அதானி குழுமத்தை சேர்ந்த அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், சூரிய மின் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இந்த செய்தி வெளியானதன் விளைவாக, இன்றைய வர்த்தக நாளில் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் கிட்டத்தட்ட 4% அளவுக்கு உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நாளின் போது, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1882 ரூபாயாக இருந்தது.

குஜராத்தில் உள்ள காவ்தா சூரிய மின் உற்பத்தி மையத்தில், செயல்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கிருந்து 551 மெகாவாட் சூரிய எரிசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது தேசிய மின் பரிமாற்றத்துக்கு பகிரப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த பகுதியில் கட்டமைப்புகள் தொடங்கப்பட்டன. ஒரே ஆண்டுக்குள் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu