அதானி குழுமத்தை சேர்ந்த அதானி கிரீன் நிறுவனத்துடன் இலங்கை அரசு 20 ஆண்டுகால ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறது. இலங்கையில் காற்றாலை மின் நிலையங்களை ஏற்படுத்துவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இலங்கையில் உள்ள மன்னார் மற்றும் பூனேரின் ஆகிய பகுதிகளில் காற்றாலை மின் நிலையங்களை அதானி குழுமம் அமைக்கிறது. இதற்காக, 442 மில்லியன் டாலர்கள் நிதியை முதலீடு செய்கிறது. சுமார் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. தற்போது, அதானி குழுமத்திடமிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி, ஒரு கிலோ வாட் ஹவருக்கு 8.26 செண்டுகள் அதானி கிரீன் நிறுவனத்துக்கு வழங்கப்படும்.