ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனத்தின் 50% பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

December 18, 2023

அதானி குழுமத்தை சேர்ந்த ஏ எம் ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனம் தற்போது ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 50.5% பங்குகளை வாங்கி உள்ளது. அண்மையில், ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக குழு கூட்டத்தில், இந்த நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, ஐ ஏ என் எஸ் நிறுவனத்தின் அதிகாரம் ஏ எம் ஜி மீடியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏ எம் ஜி மீடியா நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஐ […]

அதானி குழுமத்தை சேர்ந்த ஏ எம் ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனம் தற்போது ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் 50.5% பங்குகளை வாங்கி உள்ளது.

அண்மையில், ஐஏஎன்எஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிர்வாக குழு கூட்டத்தில், இந்த நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமத்திற்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, ஐ ஏ என் எஸ் நிறுவனத்தின் அதிகாரம் ஏ எம் ஜி மீடியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏ எம் ஜி மீடியா நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஐ ஏ என் எஸ் செய்தி நிறுவனம் மாறி உள்ளது. முன்னதாக, அதானி குழுமத்தை சேர்ந்த ஏ எம் ஜி மீடியா நெட்வொர்க்ஸ் நிறுவனம், என் டி டி வி, கவின் டில்லியன் போன்ற செய்தி தளங்களை கைப்பற்றியது. அந்த வரிசையில், தற்போது, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனமும் இணைந்துள்ளது. இந்த நிறுவனத்தை எவ்வளவு ரூபாய்க்கு அதானி குழுமம் கைப்பற்றியது போன்ற விரிவான விவரங்கள் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu