அதானி குழுமம், 2.15 பில்லியன் டாலர் கடன் தொகையை முன்கூட்டியே செலுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்காக, நிறுவனத்தின் பங்குகளுக்கு எதிராக பெறப்பட்ட கடன் தொகையாகும். எனவே, கௌதம் அதானி அறிவித்தபடி, இம்மாத இறுதிக்குள் நிறுவனத்தின் மொத்த கடனும் அடைக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையைப் பெற அதானி குழுமம் முயற்சித்து வருகிறது.
ஏற்கனவே, அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த வேண்டி பெறப்பட்ட 500 மில்லியன் டாலர் கடன் தொகையை அதானி குழுமம் திருப்பி செலுத்தி உள்ளது. தற்போது, மேலும் 2.6 பில்லியன் டாலர் பணத்தை திருப்பி செலுத்தி உள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த மொத்தம் 6.6 பில்லியன் டாலர்கள் கடன் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.














