அதானி குழுமம் அதன் விமான நிலைய வணிகப் பிரிவை விரிவுபடுத்த விரும்புவதாக ஒரு ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அவ்வறிக்கையில் அதானி குழுமமானது, விமான நிலையங்களை கையகப்படுத்துவது மற்றும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு செயல்பாடுகள் (MRO), தரை கையாளுதல் போன்ற விமான நிலைய சேவைகளின் பல்வேறு பிரிவுகளில் நுழைவது அதானியின் விரிவாக்க நோக்கத்தின் ஒரு பகுதி என்று ௯றப்பட்டுள்ளது. அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப் பழமையான ஏர்வொர்க்ஸை 400 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . எம்ஆர்ஓ நிறுவனத்தில் ஏஏஆர் 40 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
இந்நிலையில் பிரஜய் படேலுக்குச் சொந்தமான இண்டமர் ஏவியேஷன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஆர்ஓ நிறுவனமான ஏஏஆர் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் சுமார் 30 சதவீத பங்குகளை வாங்குவதற்கும் அதானிகுழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவ்வ்றிக்கை கூறியது. மேலும் படேல் வைத்திருக்கும் பங்குகளில் பாதியை வாங்க அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி ஏர் இந்தியாவின் எம்ஆர்ஓ பிரிவாக இருந்த ஏஐ இன்ஜினியரிங் சர்வீசஸ் (ஏஐஇஎஸ்எல்) நிறுவனத்தை கௌதம் அதானி தலைமையிலான குழு ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாக அறிக்கை கூறியுள்ளது. இதற்கிடையில் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் AIESL-ஐ விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.