இந்தியாவில் உள்ள 7 விமான நிலையங்களை விரிவாக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கரண் அதானி தெரிவித்துள்ளார்.
மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள 60000 கோடி ரூபாயில், 30000 கோடி ரூபாய் நகர்ப்புற விமான நிலையங்களுக்கும் மீதமுள்ள 30000 கோடி விமான போக்குவரத்து சார்ந்தும் முதலீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, கௌஹாத்தி, ஜெய்ப்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுவதாக அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் பன்சால் தெரிவித்துள்ளார். இது தவிர, தனியாக, 18000 கோடி ரூபாய் செலவில் நவி மும்பை விமான நிலையம் மேம்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ளார்.