கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மற்றும் ஊபர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாரா கோஸ்ரோஷாகி ஆகியோர் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு, ஊபர் நிறுவனத்தின் சேவைகளில் அதானி குழுமத்தின் மின்சார வாகனங்களை ஈடுபடுத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு, அதானி ஒன் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்பட்டது. இதில், விமான டிக்கெட் புக்கிங், விடுமுறை புக்கிங், கேப் புக்கிங் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, இந்த நிறுவனத்துடன் ஊபர் சேவைகள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதானி குழுமம், மின்சார வாகனங்களை கொள்முதல் செய்து, ஊபர் நிறுவனத்திற்கு வழங்க உள்ளது. இந்தக் கூட்டணி மூலம், இந்தியாவில் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கிறது. அதே சமயத்தில், ஊபர் நிறுவனத்தின் சேவைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது.














