2024-2025 நிதியாண்டில் 74,945 கோடி ரூபாய் வரி செலுத்தி அதானி குழுமம், இந்திய அரசுக்கு மிகப்பெரிய வருமானத்தை உருவாக்கியுள்ளது.
2024-25 நிதியாண்டில் அதானி குழுமம் மொத்தமாக ரூ.74,945 கோடி வரி செலுத்தி, கடந்த ஆண்டை விட 29% அதிகமாக பங்களித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ், போர்ட்ஸ், கிரீன் எனெர்ஜி போன்ற 10 நிறுவனங்களின் லாபத்தில் இருந்து இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதில் ரூ.28,720 கோடி நேரடி வரியாகவும், ரூ.45,407 கோடி மறைமுக வரியாகவும் செலுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட பங்களிப்புகள் ரூ.818 கோடியாகும். இந்திய அரசுக்கு அதிக வரி செலுத்தும் முன்னணி நிறுவனங்களில் அதானி குழுமம் தற்போது முன்னணியில் உள்ளதாகும்.