அதானி குழுமம், தனது வர்த்தகத்தை இந்தியாவைத் தாண்டி பிற நாடுகளிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெட்ரோ கெமிக்கல் மற்றும் சுரங்க திட்டங்களை அஜர்பைஜான் நாட்டில் தொடங்க கௌதம் அதானி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக, அவர், அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் ஆலியேவை கடந்த வாரம் தாவோசில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, இருதரப்பு மேம்பாடுகளுக்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அஜர்பைஜான் நாட்டில், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கும் விதமான திட்டங்கள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் பெட்ரோ கெமிக்கல், மெட்டலர்ஜி மற்றும் சுரங்கம் சார்ந்த வர்த்தகத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அஜர்பைஜான் அரசாங்கக் குறிப்பு தெரிவிக்கிறது. மேலும், சர்வதேச வர்த்தகப் பாதையில் அஜர்பைஜான் நாட்டை முக்கியமாக ஈடுபடுத்துவது குறித்தும் அவர்களது சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.