ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின்னர், அதானி குழுமத்திற்கு 12 லட்சம் கோடி சந்தை மதிப்பிழப்பு

February 25, 2023

அதானி குழுமம் மீது அடுக்கடுக்கான நிதி முறைகேடுகளை ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து, அதானி குழுமத்தின் பங்குகள் சரியத் தொடங்கின. கடந்த ஜனவரி 24ஆம் தேதி நிலவரப்படி, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 19 லட்சம் கோடியாக இருந்தது. அன்றைய தினம், அறிக்கை வெளியானதிலிருந்து, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ளது. தற்போது, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 7.3 லட்சம் கோடியாக உள்ளது. கிட்டத்தட்ட 12 லட்சம் கோடியை ஒரே மாதத்தில் அதானி குழுமம் […]

அதானி குழுமம் மீது அடுக்கடுக்கான நிதி முறைகேடுகளை ஹிண்டன்பர்க் சுமத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து, அதானி குழுமத்தின் பங்குகள் சரியத் தொடங்கின. கடந்த ஜனவரி 24ஆம் தேதி நிலவரப்படி, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 19 லட்சம் கோடியாக இருந்தது. அன்றைய தினம், அறிக்கை வெளியானதிலிருந்து, கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நிறைவடைந்துள்ளது. தற்போது, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 7.3 லட்சம் கோடியாக உள்ளது. கிட்டத்தட்ட 12 லட்சம் கோடியை ஒரே மாதத்தில் அதானி குழுமம் இழந்துள்ளது.

அதானி குழுமத்தின் கீழ் செயல்படும் 7 முக்கிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 85% இழப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக, அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகியவை கிட்டத்தட்ட 80% சரிவை சந்தித்து, இழப்புகள் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. மேலும், இந்த 3 நிறுவனப் பங்குகளும் தங்கள் ஒரு வருட குறைவான வர்த்தக மதிப்பை பதிவு செய்துள்ளன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான போது, குறையத் தொடங்கிய அதானி குழும பங்குகள் சீக்கிரமே சகஜ நிலைக்குத் திரும்பும் என்ற சில நிபுணர்கள் கருத்து தெரிவித்த நிலையில், தொடர்ந்து நிறுவனங்களின் சரிவு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu