அதானி குழுமம், பீகாரில் சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலையத்தை நிறுவ ரூ.20,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக பிரணவ் அதானி அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 12,000 முன்கூட்டிய வேலைகள் மற்றும் 1,500 செயல்பாட்டு வேலைகள் உருவாகும்.
அதானி குழுமம், இதோடு நின்று விடாமல், தளவாடங்கள், எரிவாயு விநியோகம் மற்றும் விவசாயத் தளவாடங்கள் ஆகிய துறைகளில் ரூ.2,300 கோடி முதலீடு செய்து 27,000 வேலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரணவ் அதானி கூறியுள்ளார். மேலும், கதி சக்தி ரயில்வே டெர்மினல்கள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு ரூ.1,000 கோடி மற்றும் ஐந்து நகரங்களில் 28 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவ ரூ.2,100 கோடி என மொத்தம் ரூ.2,500 கோடி முதலீடு செய்து சிமென்ட் ஆலைகளை 10 MTPA ஆக விரிவாக்க உள்ளதாக தெரிவித்தார். அதானி குழுமத்தின் இந்த முதலீடு,பொருளாதார அடிப்படையில் பின்தங்கி இருக்கும் பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.














