ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், அதானி குழுமம் கடும் சரிவை சந்தித்தது. இதனால், அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் கவலை உற்றனர். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, அதானி குழுமம் தான் பெற்ற கடன்களை முன்கூட்டியே திருப்பி செலுத்தி வருகிறது. அதே வேளையில், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், அதானி குழுமம், 19235 கோடி ரூபாய் கடனை புதிதாக பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த சில மாதங்களில் அதானி குழுமம் பெற்ற 19235 கோடி ரூபாய் கடனையும் சேர்த்து, குழுமத்தின் மொத்த கடன் நிலுவை 227248 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் 40351 கோடி ரொக்கத்தை கழித்து, அதானி குழுமத்தின் நிகர கடன் 186897 கோடியாக உள்ளது. எனவே, முந்தைய ஆண்டை விட, அதானி குழுமத்தின் கடன் மதிப்பு 17% கூடுதலாக உள்ளது. அதே வேளையில், அதானி குழுமத்தின் முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் ஆரோக்கியமானதாக உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே, புதிதாக 19235 கோடி கடன் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.