ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு பன்மடங்கு சரிந்தது. அதனால், முதலீட்டாளர்கள் மிகவும் கவலை அடைந்தனர். எனவே, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், அதானி குழுமம் அனைத்து கடன்களையும் முன்கூட்டியே செலுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது, 2.65 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கடன் தொகையை திருப்பி செலுத்தி உள்ளது.
அதானி பங்குகளுக்கு எதிராக பெறப்பட்ட 2.15 பில்லியன் டாலர்கள் கடன் தொகை மற்றும் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தை கையகப்படுத்தியதற்காக பெறப்பட்ட 700 மில்லியன் கடன் தொகை ஆகியவை தற்போது திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இந்தக் கடனுக்கான வட்டி 203 மில்லியன் டாலர்கள் தொகையும் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.