இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு ஸ்பான்சர் செய்யும் அதானி குழுமம்

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆன பிரக்ஞானந்தாவிற்கு ஸ்பான்சர் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவில் 18 வயதான சதுரங்க திறமையாளர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு அதானி குழுமம் ஸ்பான்சர் செய்வதாக முடிவு செய்துள்ளது. இது குறித்து அதானி கூறுகையில், திறமையான பிரக்ஞானந்தாவை ஆதரிப்பதில் மிகவும் பெருமை அடைகிறோம். விளையாட்டில் அவரது வேகம் மற்றும் முன்னேறும் செயல்திறன் மிகவும் பாராட்டுக்குரியது. இவர் அனைத்து இந்தியர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். மேலும் தேசத்தை பிரதிநிதிப்படுத்துவதையும், பதக்கங்களை […]

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆன பிரக்ஞானந்தாவிற்கு ஸ்பான்சர் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் 18 வயதான சதுரங்க திறமையாளர் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு அதானி குழுமம் ஸ்பான்சர் செய்வதாக முடிவு செய்துள்ளது. இது குறித்து அதானி கூறுகையில், திறமையான பிரக்ஞானந்தாவை ஆதரிப்பதில் மிகவும் பெருமை அடைகிறோம். விளையாட்டில் அவரது வேகம் மற்றும் முன்னேறும் செயல்திறன் மிகவும் பாராட்டுக்குரியது. இவர் அனைத்து இந்தியர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். மேலும் தேசத்தை பிரதிநிதிப்படுத்துவதையும், பதக்கங்களை வெல்வதையும் விட உன்னதமானது எதுவும் இல்லை. இந்த விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதில் அதானி குழுமம் முழு மனதுடன் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் இது குறித்து பிரக்ஞானந்தா கூறும்பொழுது, நமது நாடு உலக அரங்கில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வது மிகவும் ஆர்வமாக உள்ளேன். எனது ஒரே நோக்கம் நாட்டிற்காக அதிக விருதுகளை வெல்வதே ஆகும். எனது திறனின் மேல் நம்பிக்கை வைத்துள்ள அதானி குழுமத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu