இன்றைய வர்த்தக நாளில் அதானி குழும பங்குகள் கிட்டத்தட்ட 13% வரையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. அதிலும் குறிப்பாக, அதானி கிரீன் எனர்ஜி மிகப்பெரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதானி குழுமத்தை சேர்ந்த 10 நிறுவனங்களும் இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. இதன் விளைவாக, இன்று மதியம் 12 மணி அளவில் கிட்டத்தட்ட 90000 கோடி ரூபாயை அதானி குழுமம் இழந்தது. அதானி கிரீன் எனர்ஜி 13%, அதானி எண்டர்பிரைசஸ் 5.5%, அதானி போர்ட்ஸ் 5.3% அளவில் இழப்பை பதிவு செய்துள்ளன. இது தவிர, அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், என்டிடிவி, அதானி வில்மர் உள்ளிட்ட அதானி குழும நிறுவனங்கள் 4 முதல் 7% அளவுக்கு இழப்பை பதிவு செய்துள்ளன. மேலும், தொடர்ச்சியாக 7 வது வர்த்தக நாளாக அதானி எண்டர்பிரைசஸ் சரிவடைந்து வர்த்தகமாகி வருகிறது.