இன்றைய வர்த்தக நாளில், அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 10 நிறுவனங்களும் சரிவை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அதானி பவர், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கிட்டத்தட்ட 5% சரிவை பதிவு செய்துள்ளன.
அதானி எண்டர்பிரைசஸ் 7.53% சரிந்து, ஒரு பங்கு 1593.3 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதானி போர்ட்ஸ் 8.89% சரிந்து, 573.2 ரூபாய்க்கு வர்த்தகமானது. இது தவிர, அதானி குழுமத்தை சேர்ந்த என்டிடிவி பங்குகள் 4.73%, ஏசிசி பங்குகள் 4.45%, அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் 3.43% சரிவை பதிவு செய்துள்ளன.
அதே வேளையில், அதானி குழும கடன்கள் திருப்பி செலுத்தப்பட்ட பிறகும், வங்கிகளால் அதன் விவரங்கள் வெளியிடப்படாமல் உள்ளது. எனவே, அதானி குழுமம், கடன் தொகைகளை முழுமையாக திருப்பி செலுத்தியதாக என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், அதானி குழுமத்தின் முதலீட்டாளர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.