அதானி குழும பங்குகள் 6% உயர்வு

June 5, 2024

நேற்று வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கவில்லை. அதனால், நேற்று ஒரே நாளில் 10 லட்சம் கோடி அளவில் அதானி குழுமத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளதால், அதானி குழும பங்குகள் உயர்வடைந்துள்ளன. கிட்டதட்ட 6% அளவில் உயர்வு பதிவாகியுள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் கிட்டத்தட்ட 15% அளவுக்கு வீழ்ச்சி அடைந்தன. ஆனால், தெலுங்கு தேசம் கட்சி […]

நேற்று வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கவில்லை. அதனால், நேற்று ஒரே நாளில் 10 லட்சம் கோடி அளவில் அதானி குழுமத்துக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளதால், அதானி குழும பங்குகள் உயர்வடைந்துள்ளன. கிட்டதட்ட 6% அளவில் உயர்வு பதிவாகியுள்ளது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் கிட்டத்தட்ட 15% அளவுக்கு வீழ்ச்சி அடைந்தன. ஆனால், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் நீடிப்பதாக பேட்டி அளித்ததை தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தை ஏற்றம் பெற தொடங்கியது. அதானி குழும பங்குகள் 6% அளவுக்கு உயர்வடைந்தன. இன்றைய நாளில் ஏற்றம் கண்ட முதன்மை நிறுவனமாக அதானி போர்ட்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 8.46% உயர்ந்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் 5.92% உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu