அதானி குழுமம், குஜராத்தில் உள்ள கவ்டா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவில் இருந்து கூகுள் கிளவுட் சேவைகளுக்கு சுத்தமான ஆற்றலை வழங்க உள்ளது. 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இயங்கத் தொடங்கும் புதிய சூரிய-காற்று கலப்பின திட்டத்தின் மூலம் இந்த ஆற்றலை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
கூகுள், தனது கிளவுட் செயல்பாடுகளை 2030ஆம் ஆண்டுக்குள் முழுமையாக சுத்தமான ஆற்றலால் இயக்க திட்டமிட்டுள்ளது. அதானி குழுமமும் தூய்மையான ஆற்றலால் இயங்கும் தரவு மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இந்த கூட்டு முயற்சி, இந்தியாவில் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.