34900 கோடி மதிப்பிலான முந்த்ரா பெட்ரோ கெமிக்கல் திட்டம் நிறுத்தம் - அதானி குழுமம்

March 20, 2023

கடந்த 2021 ஆம் ஆண்டு, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், அதானி குழுமத்தை சேர்ந்த முந்த்ரா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனம் சார்பில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 34900 கோடி ரூபாய் மதிப்பிலான முந்த்ரா பெட்ரோ கெமிக்கல் திட்டம், அடுத்த அறிவிப்பு வரும் வரை முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அதானி குழுமத்தின் பல்வேறு திட்டங்கள் மறு […]

கடந்த 2021 ஆம் ஆண்டு, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், அதானி குழுமத்தை சேர்ந்த முந்த்ரா பெட்ரோ கெமிக்கல் லிமிடெட் நிறுவனம் சார்பில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுமார் 34900 கோடி ரூபாய் மதிப்பிலான முந்த்ரா பெட்ரோ கெமிக்கல் திட்டம், அடுத்த அறிவிப்பு வரும் வரை முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர, அதானி குழுமத்தின் பல்வேறு திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு, நிதி இருப்புக்கு தக்கவாறு மாற்றியமைக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில், அதானி குழுமம் மீது நிதி முறைகேடுகள் குவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு வேகமாக சரிந்தது. நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த, அதானி குழுமம் பெற்றிருந்த கடன் தொகைகள் திருப்பிச் செலுத்தப்பட்டன. எனவே, தற்போதைய நிலையில் நிறுவனத்திடம் அதிக பணப்புழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. அதன் விளைவாக, முந்த்ரா பெட்ரோ கெமிக்கல் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu